Monday, November 2, 2015

ஜாதகம் உண்மையா?

ஜாதகத்தைப் பற்றி பேசுவது மிகவும் எளிது. பேசி முடிப்பது மிகவும் கடினம். சில ஜோதிடர்களைப் பார்த்துள்ளேன். அவர்களுக்கும் ஜோதிடத்திற்கும் எவ்வித சம்பத்தமும் இருக்காது. அவர்கள் மிக ஆரம்ப நிலை ஜோதிடர்கள். அவர்கள் ஜோதிடம் சொல்ல, அங்கும் ஒரு கூட்டம் இருக்கும்.

நானும் அத்தகைய ஜோதிடர்களுள் ஒருவன் போல் தான். ஜோதிடம் ஒரு கடல். முழுவதும் கற்று ஜோதிடம் பார்க்க வேண்டுமெனில், அதற்கென கோள்கள் நமது ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும்.

இப்பொழுது காலம் மாறிவிட்டது. ஜோதிடம் ஒரு பெரிய பிசினஸ். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி வந்தால், லாபம் தான் இந்த ஜோதிடர்களுக்கும், புத்தக விற்பனையாளர்களுக்கும்.

நான் ஜோதிடத்தைப் படிக்கும் பொழுது, எழுதப்பட்ட விதியானது மாற்ற முடியாது என்று படித்தேன். பிறகு எங்கிருந்து வந்தது இந்த பரிகாரங்கள்? அதற்கும் ஒரு பதில் இருக்கிறது. பரிகாரங்கள், நமது வாழ்க்கையை மாற்ற போவது இல்லை. அவை, எதிவர இருக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நமக்கு தைரியம் மட்டுமே கொடுக்கும்.

அப்படியென்றால் ஜோதிடம் உண்மையா? நான் அறிந்தவரை ஜோதிடம் உண்மைபோலவும் காட்சி அளிக்கிறது. பொய் என்றும் எண்ண வைக்கிறது. நடந்து முடிந்த அத்தனை விசயங்களையும் ஜோதிடத்தில் பிணைக்க முடியும். ஆனால் எதிர்வரும் நிகழ்வுகளை அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது.

குரு உச்சம், நல்லது நடக்கும் என்று நினைத்தால், தீமை நடக்கலாம். பிறகு, நன்றாக ஆராய்ந்தால், வேறு கோள்களின் பார்வை, குருவின் நட்சத்திர சாரம் என்று எவ்வளவோ விஷயங்கள் நடக்கவிருந்த நன்மையை மாற்றியிருக்கும்.

சித்தர்கள் ஜோதிடத்தை பற்றி எழுதிய பிறகு, என்னால் அதை பொய் என்று கூறமுடியாது. ஆனால், எழுதப்பட்டவை அனைத்தும் அவர்கள் எழுதியது தானா? அல்லது காலப்போக்கில் அவை இடைச்செருகலாக மாரி இருக்குமோ என்றும் எண்ண தோன்றுகிறது.

அகத்தியர், ஜோதிடத்தை வாழ்வாதாரமாக மட்டுமே எடுத்து கொள்ளவேண்டும் என்று கூறியதாக கேள்விபட்டு இருக்கிறேன். எனவே ஜோதிடமே வாழ்க்கை என்று வாழாமல், நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

என்னை பொருத்தவரை ஜோதிடம் உண்மையாகவே இருக்க வேண்டும். பல வாழ்க்கை உதாரணங்கள் அதை வெளிப்படுத்திருக்கிறது. ஆனால் அதை கணித்து கூறும் அளவிற்கு சிறந்த ஜோதிடர்கள் இல்லை என்பதே உண்மையாக இருக்க வேண்டும்.

தவறான ஜோதிடர்களை கண்டு பணத்தை மட்டுமிலாமல், வாழ்க்கையையும் அழித்துகொள்ளாதிர்கள்!